எங்கள் பேச்சைக் கேட்காததால் தடுமாறும் கோட்டாபய அரசு! மைத்திரி பதில்
By S P Thas
இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம். எனினும், எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது என்று முன்னாள் அரச அதிபரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசு இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடைவித்தது கடந்த போகத்தின் ஆரம்பத்திலாகும். இதன்போது ஊடகங்கள் ஊடாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் விவசாயிகள் மத்தியிலும் அமைதியின்மை ஏற்பட்டு வீதிகளில் சிறிதளவில் போராட்டங்கள் நடத்து வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.