15 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை அசைக்க முடியாது - மார்தட்டும் துமிந்த சில்வா
goverment
gotabaya
Duminda Silva
By Jaso
கோட்டபாய(gotabaya) தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் 15 ஆண்டுகளுக்கு வீழ்த்த முடியாது என தான் பொறுப்புடன் கூறுவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா (Duminda Silva)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் பசளை பிரச்சினை இருக்கின்றது. ஆசிரியர்களின் பிரச்சினை இருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கின்றது. இந்த ஒவ்வொரு பிரச்சினைகளால் அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கின்றனர். இன்னும் 15 ஆண்டுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன் என துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி