ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து அம்பலம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டத்தொடர் இலங்கை மற்றும் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை மிக முக்கியமான கூட்டத்தொடராக கருதப்படுகின்றது.
அதன்படி, இலங்கை தொடர்பில் கடுமையான சில தீர்மானங்கள் வர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த தீர்மானத்தில் என்ன விடயங்கள் உள்வாங்கப்பட போகின்றன, இதற்கு இலங்கை அரசு என்ன வகையில் ஒத்துழைப்பு வழங்க போகின்றது போன்ற விவகாரங்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லரினால் விவாதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பென் மெல்லருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த கலந்துரையாடலில் வெளியுறவு சார்ந்தும், அநுர குமார திசாநாயக்க சார்ந்தும் சற்று நெருடலான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியாவில் அண்மையில் விதிக்கப்பட்ட தடைகள் முன்னரே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த தடைகளை விரைவு படுத்தியமைக்கு மேற்படி கலந்துரையாடலும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது குறித்த மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
