கோட்டாபய ஆட்சிக்கு வந்தபோது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை -முத்தெட்டுவே ஆனந்த தேரர் விளாசல்
gotabaya
happy
Ven. Murutthetituwe Ananda Thero
By Sumithiran
“கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த போது நாம் அனைவரும் அனுபவித்த மகிழ்ச்சி இன்று இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. முத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது போன்ற வரிசை யுகத்தை நாம் பார்த்ததில்லை. அனைத்து கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அரசில் நிர்வாகம் இல்லை. கண்காணிப்பு இல்லை. பொருத்தமான இடங்கள் இல்லை.
அரசாங்கத்தின் குறைபாடுகளை இப்போது கண்டறிந்து என்ன நடந்தது என்பதை கண்டறியுமாறு அரச தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மிஸ்டர் பிரசிடெண்ட், உங்களைச் சுற்றியுள்ள வஞ்சகர்களின் பேச்சைக் கேட்டு நீங்கள் முன்னேறப் போகிறீர்கள் என்றால், நாங்கள் விரைவில் வேறு வழியைப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி