யாழில் கனமழையின் தீவிரம்: நைனாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, நைனாதீவு பகுதியில் அதிகபட்சமாக 122.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று திங்கட்கிழமை காலை 8 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியிலேயே இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதிகளவான மழை
இதற்கமைய, அச்சுவேலி பகுதியில் 111.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறை பகுதியில் 108.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் 101.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறுகிய காலப்பகுதியில் அதிகளவான மழை பெய்துள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.
மழை காரணமாகப் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் நிலவும் வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |