கலகொட அத்தே ஞானசார தேரர் எனப்படும் கரந்தெனியே நுவன்சிறி குமார மீதான வழக்குகளின் வரலாறு...

Galagoda Aththe Gnanasara Thero Ministry of justice Sri lanka
By Dharu Oct 08, 2026 10:34 AM GMT
Report

2019-ல் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, நீதிமன்ற அவமதிப்புக்காக 2018-ல் அவருக்கு விதிக்கப்பட்ட மீதமுள்ள ஆறாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு 2026 ஒக்டோபர் 5-ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1975 மார்ச் 4 அன்று காலி, கரந்தெனிய, கலகொட அத்தேவில் நுவன்சிறி குமார என்ற பெயரில் பிறந்த இவர், ஏழாம் வகுப்பில் துறவற தீட்சை பெற்று, களனி பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

ஞானசார தேரரின் காவியுடையை களைவதை விட அவரைச் சுடுவதே மேல் : என்கிறார் சமந்தபத்ர தேரர்

ஞானசார தேரரின் காவியுடையை களைவதை விட அவரைச் சுடுவதே மேல் : என்கிறார் சமந்தபத்ர தேரர்

கோட்டாபய வழங்கிய நியமனம் 

2012-ல் பொதுபல சேனா அமைப்பின் இணை நிறுவனரான இவர், 2021 ஓக்டோபரில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வால் நியமிக்கப்பட்ட 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயற்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக மதுபோதையில் வாகனம் செலுத்தியது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் 2000ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. (வழக்கு இலக்கம்: 6315/2000).

அந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதி அவர் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் 12,000 ரூபாய் அபராதம் விதித்தது.

பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது குறித்து கேட்கப்பட்டபோது, அச்சந்தர்ப்பத்தில் வாகனத்தை ஓட்டியது தான் அல்ல, இராணுவ அதிகாரி ஒருவரே என அவர் தெரிவித்திருந்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தகராறு சம்பவம் காரணமாக ஞானசார தேரர் குறித்து முதன்முதலில் ஊடகங்களின் கவனம் 2012 ஜூன் மாதத்தில் திரும்பியது.

இதுதொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதுடன், அதில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலில் நுழைந்து கொட்டாவ வெளியேறும் வாயிலில் வெளியேறியபோது, ஞானசார தேரரும் கிருலப்பனை நந்த தேரரும் பயணித்த வாகனத்தின் ஒரு பிரேக் விளக்கு இயங்காதது மற்றும் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அநீதி எனக் கருதியதால் தான் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக அவர் கூறினார். இந்தச் சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த கிருலப்பனை நந்த தேரருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியான போதிலும், உண்மையில் திட்டியவர் ஞானசார தேரரே எனக் குறிப்பிடப்பட்டது.

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

சட்டரீதியான சம்பவங்கள்

2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம், நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பை பரப்புவதற்காக வெளிப்புற சக்திகள் அவரைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்டச் சம்பவமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அக்காலகட்டத்தில் பல்வேறு சமூக மற்றும் அரசியல் சம்பவங்களில் பிக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பின் இணை நிறுவுநராகவும் அதன் பொதுச் செயலாளராகவும் பதவியேற்ற கலகொடஅத்தே ஞானசார தேரரைச் சுற்றியுள்ள சட்டரீதியான சம்பவங்களின் தொடர்ச்சி பின்வருமாறு:

-2014 ஏப்ரல் 9: கொழும்பு கோட்டை நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய பல சேனா ஊடகவியலாளர் சந்திப்புக்குள் நுழைந்து வட்டரக்க விஜித தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்தார். பின்னர் கோட்டை காவல்  நிலையத்திற்கு முன்பாக குர்ஆன் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

முஸ்லிம் விவகார பணிப்பாளர் நாயகம், அந்தக் கருத்துகள் அவமதிப்பானவை எனத் தெரிவித்தார். இதன்  வழக்குக் கோப்பு சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டது.

-2014 ஜூன் 15: அயகம சமித தேரரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பின்னர் அளுத்கம பேரணியில் உரையாற்றினார். சில மணிநேரங்களுக்குப் பின்னர் அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. நான்கு பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்படவில்லை.

-2014 ஜூன் 26: வன்முறை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுபல சேனா உறுப்பினர்கள் 13 பேரை விடுதலை செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வதாக  அச்சுறுத்தினார். அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

-2016 ஜனவரி 25: ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் B 7417/10 வழக்கில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அனுமதியின்றி திறந்த நீதிமன்றத்தில் உரையாற்றி மூத்த அரச சட்டத்தரணி திலீப் பீரிஸை அவமதித்ததுடன், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தினார். அவர் தமிழீழ தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் இராணுவத்தை அவமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். நீதவான் ரங்க திசாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறைப்பாடு செய்தார். அதே நாளில் நீதிமன்றத்தை அவமதித்தல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல் மற்றும் அரச அதிகாரி ஒருவரை அச்சுறுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

-2016: ஊடகவியலாளர் சந்திப்புகள் தொடர்பாக தனித்தனியாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று குராகல/ஜயிலானி தொடர்பான கருத்துகள் பற்றியது. மற்றொன்று 2016 ஜூலை 16ஆம் திகதிக்கு அருகிலான காலப்பகுதியில் கிருலப்பனை ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட சம்பவம் தொடர்பானது.

ஞானசாரதேரரின் காவியுடை களைவு :அரசின் நிலைப்பாடு வெளியானது

ஞானசாரதேரரின் காவியுடை களைவு :அரசின் நிலைப்பாடு வெளியானது

திகன  கலவரம்

-2017 ஜூன் 21: முன்னைய பிடியாணை தொடர்பாக சரணடைந்த தேரரை கோட்டை நீதவான் முன் பிணையில் விடுவித்தார். பின்னர் வெலிக்கடை சம்பவத்தில் காவல்துறையினர் கடமைகளுக்கு இடையூறு செய்தல், அச்சுறுத்தல் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் திட்டமிட்ட குற்றப்பிரிவு மீண்டும் அவரைக் கைது செய்தது. கொழும்பு பிரதான நீதவான் அதே நாளில் ஒரு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு பிணையாளர்களின் உத்தரவாதத்திலும் அவரை செல்ல அனுமதி வழங்கினார்

-2018 பெப்ரவரி: சிங்கள லொறி சாரதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து திகன பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் ஏற்பட்டன. அந்தக் கலவரங்கள் தொடர்பாக அவருக்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை.

-2018 மே 24: சந்தியா எக்னெலிகொடவை குற்றவியல் ரீதியாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவரை ஹோமாகம நீதவான் உதெஷ் ரணதுங்க, குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார்.

-2018 ஜூன் 14: ஹோமாகம நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆறு மாத கடூழியச் சிறைத்தண்டனையும், 1,500 முதல் 3,000 ரூபாய் வரையிலான அபராதமும், சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 ரூபாய் இழப்பீடும் வழங்க மன்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சில அறிக்கைகளின்படி, இது ஒரு வருடத் தண்டனையாக இருந்து ஆறு மாதங்கள் சிறையில் அனுபவிக்க வேண்டிய வகையில் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அவர் முதன்முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் குற்றவாளித் தீர்ப்பை பின்னர் உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

-2018 ஆகஸ்ட் 8: மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஹோமாகம சம்பவம் தொடர்பான நான்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளிலும் அவரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்தனர். முறையே 4, 4, 6 மற்றும் 5 ஆண்டுகள் என மொத்தம் 19 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால், நடைமுறைச் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையாக அமைந்தது.

-2019 மே 23: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு மன்னிப்பு வழங்கினார். சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலையானார். மன்னிப்புக் கோப்புடன் இணைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறிக்கையில், சலுகைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தண்டனைக் காலம் 2022 ஜூலை 28ஆம் திகதி முடிவடைய வேண்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைக்கு சில நாட்களுக்குப் பின்னரும், மூத்த பிக்குகள் மன்னிப்பு கோரி அழுத்தம் கொடுத்த பின்னரும் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

திறந்த பிடியாணை

-2021 ஒக்டோபர் 26: வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 13 உறுப்பினர்களைக் கொண்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக அவரை நியமித்தார். அந்தச் செயலணி தனது அறிக்கையை 2022 ஜூன் 29ஆம் திகதி சமர்ப்பித்தது.

-2023 ஒக்டோபர் 2: பம்பலப்பிட்டியிலுள்ள வீட்டு தகராறு தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். முறைப்பாட்டாளரான இனோகா சேனாநாயக்க, தனது அத்தை சுமித்ரா சேனாநாயக்க வீரசிங்கவினால் ஒப்படைக்கப்பட்ட வீட்டை அதன் உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தார்.

-2024 மார்ச் 28: கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, 2016ஆம் ஆண்டு குராகல தொடர்பான கருத்துகளுக்காக நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு வேண்டுமென்றே பாதிப்பு ஏற்படுத்தியதாக நீதிமன்றம் தீர்மானித்தது. அவர் வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் பிணை மறுக்கப்பட்டது.

-2024 ஜூலை 18: திருத்த மனு விசாரணை முடியும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. 50,000 ரூபாய் பணப் பிணை, தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு பிணையாளர்களின் உத்தரவாதம் மற்றும் வெளிநாடு செல்லத் தடை ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

-2024 ஜூலை 22 அன்று மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்வதற்கான முறையான உத்தரவை வழங்கியது.

-2024 செப்டம்பர் 12: மேலதிக நீதவான், அவருக்கும் மேலும் இருவருக்கும் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டிய பெறுமதியுள்ள பம்பலப்பிட்டிய வீட்டு சொத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

-2025 ஜனவரி 9: கொழும்பு நீதவான் நீதிமன்றம், 2016 ஜூலை கிருலப்பனை ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாத்தை அவமதித்தமை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு செய்தமைக்காக ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதித்தது.

-2026 ஜூன் 1: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வீட்டு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சொத்தை சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைத்து வெளியேறுவார்கள் என பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.

-2026 ஜூன் 23: கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்ன, அவரது மேன்முறையீட்டை நிராகரித்து ஒன்பது மாதச் சிறைத்தண்டனையையும் 1,500 ரூபாய் அபராதத்தையும் உறுதிப்படுத்தினார்.

-2026 செப்டம்பர் 10: உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா, 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையையும் இயற்கை நீதிக் கோட்பாடுகளையும் மீறியது என்றும், அதிகார வரம்பை மீறியதும் செல்லுபடியாகாததுமானது என்றும் தீர்ப்பளித்தார். மனுதாரர்களாக கொள்கை மாற்று மையம், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் சந்தியா எக்னெலிகொட ஆகியோர் இருந்தனர். குற்றவாளித் தீர்ப்பும் தண்டனையும் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், மன்னிப்பு என்பது தண்டனையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துவதே தவிர குற்றவாளித் தீர்ப்பை அழிப்பதல்ல என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது. செப்டம்பர் 12ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ராஜகிரிய நாவல வீதியில் உள்ள அவரது விகாரைக்கு சென்றபோதும், அவர் அங்கு இருக்கவில்லை.

-2026 செப்டம்பர் 16: இஸ்லாம் தொடர்பான வழக்கொன்றில் அவர் தனிப்பட்ட முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கு செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-2026 செப்டம்பர் 29: மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து பிடியாணை பிறப்பித்தனர். அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார். ஆனால் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மறுநாள் கொழும்பு மேல் நீதிமன்றமும் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கில் பிடியாணை பிறப்பித்தது.

-2026 ஒக்டோபர் 1: மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணையையும் வெளிநாடு செல்லத் தடையையும் பிறப்பித்து, அதனை காவல்துறைமா மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.

-2026 ஒக்டோபர் 3: கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு, களுத்துறை திணியாவல ஆரண்ய சேனாசனத்தில் அவரைக் கைது செய்தது. இது பிடிகல பிரதேசத்தில் உள்ள லேனகிரி ஆரண்யம் என்றும் அழைக்கப்படுகிறது.

-2026 ஒக்டோபர் 4: கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அன்றிரவு வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதுடன், மறுநாள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டது.

-2026 ஒக்டோபர் 5: மேன்முறையீட்டு நீதிமன்றம், ஆறு ஆண்டுச் நீதிமன்ற அவமதிப்பு தண்டனையின் எஞ்சிய காலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் உரையாற்றுவதற்கான பாதுகாப்புத் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

- 2026 ஒக்டோபர் 6: இஸ்லாம் மற்றும் குர்ஆன் தொடர்பான கருத்துகள் குறித்து சட்டமா அதிபர் தொடர்ந்த வழக்கில் அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிறைச்சாலை உடையில் முன்னிலையானார். வழக்கமான காவி ஆடையில் அல்ல. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, அரசியலமைப்பின் 9ஆம் உறுப்புரையின் கீழ் ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி புத்தித ஸ்ரீ ராகல, அந்த ஆட்சேபனையை உயர் நீதிமன்றத்துக்கு முன்வைக்க முடியும் எனத் தெரிவித்ததுடன், வழக்கை ஒக்டோபர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2026 ஒக்டோபர் 7: களனியில் உள்ள வங்கி அதிகாரி ஒருவர் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பிடியாணைகள் நடைமுறையில் இருந்தபோது அவரை ராஜகிரியிலிருந்து எல்பிட்டிய நோக்கி அழைத்துச் சென்றதாக ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள்

அகற்றப்பட்ட ஞானசார தேரரின் காவி உடை: அரசுக்கு கடும் அழுத்தம் - தொடர்ந்து பறக்கும் கடிதங்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025