KKS விடுதி புத்தர் சதிகள் : தமிழ்சூத்திரங்கள் : சீஐடி தூக்கங்கள்!
திருமலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் நடந்தது போல தையிட்டியில் ஒரு புத்தர் சிலையை இன்று குந்த வைக்கும் நோக்குடன் எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
இந்த புத்தர் சிலை சிறிலங்கா படையினரால் காங்கேசன் துறையில் நடத்தப்படும் தல் செவன விடுதியில் மீட்கப்பட்டுள்ளதான தகவல்கள் பரபரப்பாக வெளியாகின.
இந்த விடுதி இராணுவத்தால் நடத்தப்படும்போது அதே படைத்துறை தையிட்டியில் அடாவடியாக கட்டிய விகாரைக்குரிய புத்தர் சிலை இங்கு இருப்பது பெரும் புதினம் அல்ல.
ஆனால் இந்த சிலை சிகிரியா பகுதியில் இருந்து யாழ்வடமுனைக்கு பயணிக்கப்படும் வரை தூங்கிய சீஐடியினர் இறுதிநேரத்தில் தமக்கு கிட்டிய இரகசிய தகவலை அடுத்து சிலையை மீட்டதாக சொல்லிக்கொண்டனர்
தையிட்டியில் கட்டப்பட்ட புதிய விகாரை ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்ற விடயம் இப்போது வடக்கின் முக்கிய பௌத்த முகங்களால் சொல்லப்படுவது ஒரு பிளிற்ஸ் கிறிக் ரக தாக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில் இந்த தல்செவன சதிகள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் குறித்த விடயங்களை எடுத்துவருகிறது செய்திவீச்சு ..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |