சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வத்தளை பகுதியில் இருந்து சென்ற குறித்த பெண் நேற்று 10 இரவு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று இரவு தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது சியத்த கங்குல பகுதியில் திடீரென சுகவீனமுற்றுள்ளார்.
சிகிச்சை பலனின்றி
இந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வத்தளை பகுதியில் இருந்து தனது குடும்பத்துடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 80 வயதுடைய சுமணாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |