வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் : அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் நேற்றைய தினம் (24.03.20025) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் காணியை மக்களுக்கு பெற்றுத்தருவதே தங்களது பொறுப்பு எனவும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தங்களது அரசாங்கம் தேர்தல் விடயங்களில் தலையிடாது எனவும் கடந்த அரசாங்கங்களைப் போன்று சூழ்ச்சிகளை மேற்கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கான நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 10 மணி நேரம் முன்
