இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கு : ஆபத்தில் பொது மக்கள்
இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A-9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
அதாவது பாரியளவு மின் இணைப்பினை கொண்ட இந்த மின் கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது.
முறிந்த மின் கம்பம்
முறிந்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது.
ஆனால் தற்போது காற்றின் தாக்கம் அதிக அளவு ஏற்பட்டால் மின்கம்பம் கீழே விழுந்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது மட்டுமன்றி A-9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது.
அந்த வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயந்தபடியே பயணிக்க வேண்டிய நிலைமையில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலம் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும், இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
