வவுனியாவில் இலஞ்சம் கோரிய காவல்துறை அதிகாரி - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட வவுனியா (Vavuniya) - பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி காணி பிணக்கு ஒன்று தொடர்பில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்டபோது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (22) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் இலஞ்சம் பெற்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்பதிகாரி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று பூவரசங்குளம் காவல் நிலையத்திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்பட்ட போது கைதுசெய்துள்ளனர்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

