தமிழர்பகுதியொன்றில் அதிரடி சுற்றிவளைப்பை மேற்கொண்ட காவல்துறையினர்!
                                    
                    Kilinochchi
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Harrish
            
            
                
                
            
        
    கிளிநொச்சியில்(Kilinochchi) வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வாகனங்கள் பல சோதனையிடப்பட்டுள்ளன.
மற்றுமொருவர் கைது
இதேவேளை,யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது இன்று (29.11.2024) முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        