காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
Sri Lanka Police
By Laksi
மாத்தறை -கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (27) மாத்தறை கொடவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொடவில காவல் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டு
நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்தே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |