சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ரணில்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அதிபர் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
ரணில் விக்ரமசிங்க, அதிபராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம்
சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு பயணமாகினார்.
இந்த விஜயத்தின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் அதிபர் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிபரின் சீன விஜயத்தின் போது, சீனாவின் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஒப்பந்தம்
அதிபர் சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிக ஆபத்துள்ள தொலைபேசி தொடர்பாடல் நிறுவனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் குவாவி நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சீனாவில் வைத்து ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது.
இந்நிலையில் சீனா விஜயத்தை மேற்கொண்ட அதிபர் 4 நாட்களின் பின்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
