இணையத்தில் உச்சம் தொட்ட பலகாரம் விலை
தமிழ், சிங்கள புத்தாண்டு உணவு மேசையில் பிரதான அங்கம் வகிக்கும் பலகாரம் ஒன்று இணையத்தின் ஊடாக 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழ், சிங்கள புத்தாண்டு பிறப்பு என்றால் பலகாரம் மற்றும் தின்பண்டங்களுக்கு தான் முதலிடம் வழங்கப்படும்.
முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் இணையத்தின் ஊடாக தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான பலகாரங்கள் அதிகளவில் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு பலகாரங்கள்
எவ்வளவு அதிகமாக புத்தாண்டு பலகாரங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றதோ அதற்கு நிகராக அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தமிழ், சிங்கள புத்தாண்டு உணவு மேசையில் பிரதான அங்கம் வகிக்கும் பலகாரம் ஒன்று இணையத்தின் ஊடாக 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் ஆஸ்மி இனிப்புவகை ஒன்றின் விலை 170 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. தேன்குழல் வகை இனிப்பு (ஜிலேபி) ஒன்றின் விலை 100 ரூபாவாகவும், கொக்கிஸ் ஒன்றின் விலை 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுகின்றது.
சிறப்பு அங்காடி
சில சிறப்பு அங்காடிகளில் அனைத்து பலகாரங்களும், தின்பண்டங்களும் அடங்கிய பொதியொன்று 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் புதுவருட உணவு மேசை ஒன்றை தயார்படுத்துவதற்கான செலவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
