வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள திட்டம்
கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் எதிர்காலம் குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன்(Kehaliya Rambukwella) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில், கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் ஏற்கனவே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மொத்த மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமானோர் கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதாலும், பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுவதாலும், கொவிட் தடுப்பூசி அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டால், தடுப்பூசி போடாதவர்களை இனம் காண முடியும் என ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.