ஐந்து நாடுகளை இலக்கு வைத்து அமுல்படுத்தப்படவுள்ள திட்டம்

srilanka tourist Prasanna Ranatunga
By Jaso Oct 26, 2021 08:51 AM GMT
Report

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உலகின் முன்னணி நாடுகளான ஐந்து நாடுகளை இலக்காகக் கொண்டு விசேட ஊக்குவிப்புத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கஜகஸ்தான், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுற்றுலா அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் பணிப்பாளர் சபை மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் பணித்தார்.

சுற்றுலா அமைச்சின் தகவலின்படி ஜனவரி முதல் ஒக்டோபர் 24 வரை 54,768 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். செப்ரெம்பர் மாதம் 13,547 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இன்று வரை 16,451 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இந்தியா, ஐக்கிய இராச்சியம், பாகிஸ்தான், ரஷ்ய கூட்டமைப்பு, ஜேர்மனி, மாலைதீவு, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் இருந்து இந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, அந்த நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால ஊக்குவிப்புத் திட்டங்கள், பயண முகவர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விசேட ஊக்குவிப்புத் திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி