கால் பதித்தது அமெரிக்கா -ராஜபக்ச மும்மூர்த்திகளுக்கே வெளிச்சம்
யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமெரிக்கா தனது சொந்த கப்பலை நிறுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ(Nalintha Jayatissa) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அனல்மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சர்வதேச கேள்வி கோரப்பட்ட போதிலும், அவை அனைத்தும் நீக்கப்பட்டு, New Fortress Energy நிறுவன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) சந்தித்து திட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இன்றுவரை இந்த உடன்படிக்கை பற்றி நாட்டு மக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எதுவும் தெரியாது என்றும் முதல் மூன்று ராஜபக்சாக்களுக்கு மட்டுமே இது தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.