கோட்டாபயவின் செயல்பாடுகளால் ஏமாற்றமடைந்துள்ளோம்! ஆதங்கத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
அரசதலைவர் நடைமுறைப்படுத்தும் சில வேலைத்திட்டங்கள் அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தவை அல்ல என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க (Kevindu Kumaratunga)தெரிவித்துள்ளார்.
அரசதலைவர் தனது இரண்டு ஆண்டு பதவி காலத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய முக்கியத்துவமிக்க வளங்கள் சர்வதேசமயப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
இது போன்ற பல பிரச்சினைக சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகள் பெரிய ஏமாற்றத்தில் உள்ளதாக கெவிந்த குமாரதுங்க (Kevindu Kumaratunga) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் யுத்துகம (கடமை) அமைப்பின் தலைவரான கெவிந்து குமாரதுங்க(Kevindu Kumaratunga), சிங்கள வலையொளி தளம் ஒன்று வழங்கிய பேட்டியில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாடு, ஒரு சட்டத்தை உருவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசதலைவர் செயலணிக் குழுவின் தலைவர் பதவியை கலகொட அத்தே ஞானசார (Galagoda athi Gnanasara) தேரருக்கு வழங்கியமை இந்த நிலைமைகு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசதலைவர் நடைமுறைப்படுத்தும் சில வேலைத்திட்டங்கள் அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தவை அல்ல என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிங்கள தேசியவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை இப்படியான பதவியில் நியமித்தன் மூலம் தான் உள்ளிட்ட தரப்பினர் அரசதலைவர் தேர்தலுக்கு முன்னர் இருந்தே பேசி வந்த நாட்டின் உரிமைகள் மற்றும் தார்மீகம் என்பன ஒரு புறத்திற்கு தூக்கி எறியப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.