“சாரம் தைத்துக் கொள்ளவதற்கு முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்ற காரியத்தை செய்த அரசாங்கம்”
சேதன பசளை முறையை தேயிலை உற்பத்தியில் நடைமுறைப்படுத்தியதனால் தேயிலையினால் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி வருமானம் குறைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"எங்களுக்கு அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்ற ஓர் வழியாக தேயிலை உற்பத்தி காணப்பட்டது. சேதன பசளை முறையை தேயிலை உற்பத்தியில் நடைமுறைப்படுத்தியதனால் தேயிலையினால் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி வருமானம் குறைந்துள்ளது.
சுயவிமர்சன அடிப்படையில் இந்த விடயத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
இது அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்த ஓர் விடயம். எனினும் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது போனது என்பதனை ஏற்றுக்கொள்கின்றேன்.
சாரத்தை தைத்துக்கொள்ள முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்றதொரு நிகழ்வாகவே இதனை கருத வேண்டும்" என மேலும் தெரிவித்துள்ளார்.