தமிழீழ போருக்கு பின்னர் தமிழர் அரசியலுக்கு முட்டுக்கட்டையான தென்னிலங்கையின் இரகசிய நிகழ்ச்சி நிரல்
தமிழ் தேசியப் போராட்டத்தை அரசியல் நல்விளைவாகக் கொண்டு, முன்னேறும் போக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தோல்வி கண்டுள்ளன என அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தன்மையே போருக்குப் பின்னரான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு உருவாக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தமிழீழப் போரை எதிர்த்த தென்னிலங்கை அரசாங்கம் இன்றும் போருக்குப் பின்னரான ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வைத்துள்ளது.
இதில் தமிழ் மக்களிடையே ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதைத் தடுத்தல், மீண்டும் ஒரு போராட்டச் சூழலைத் தமிழர் தரப்பு கையில் எடுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்களில் தென்னிலங்கைத் தரப்பினர் ஆழமாக ஆராய்ந்து செயற்பட்டு வருகின்றனர் எனவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
இவ்வாறு தமிழர் அரசியலில் விடைதெரியது எஞ்சி நிற்கும் பல கேள்விக்களுக்கு மத்தியில், தற்போதைய தமிழர் அரசியல் சூழல் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |