ஊரடங்கு தளர்வின் பின்னரான நிலைமை - இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு
curfew
shavendra silva
situation
By Sumithiran
கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்ததை அடுத்து தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva ) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே மட்டுமே இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாடு திறந்த பின்னர் செயல்படுத்தப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட உள்ளன.