ஆறாம் நிலம் - ஆறாத ரணம்
ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமாக ஆறாம் நிலம் உள்ளது.
போர்க்காலத்தில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது. இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியதாக கதைக்களம் உள்ளது.
கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் நடப்பில் காட்டியுள்ளார் நவயுகா.
இவருடைய குழந்தையாக நடித்த சிறுமி அன்பரசியும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தினமும் தந்தையை தேடும் மகளாகவும், தாயிடம் தந்தையை கேட்டு அளும் குழந்தையாகவும், தந்தைக்காக போராடும் பாசத்தையும் நடிப்பில் அழகாக காட்டியுள்ளார்.


