சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி
Ministry of Health Sri Lanka
Strike Sri Lanka
National Health Service
By Sumithiran
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ‘டட்’ கொடுப்பனவு தமக்கும் வழங்கப்படவேண்டுமென தெரிவித்து சுகாதார தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
அதன்படி, வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 'டட்' என்ற போக்குவரத்து கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்று தமக்கும் கிடைக்கவுள்ளதாகவும் அதில் 50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்
இதனையடுத்து சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி