தனியார் நிதி நிறுவனத்தில் பெருந்தொகை நகைகள் திருட்டு! இருவர் கைது
Sri Lanka Police
Ratnapura
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
இரத்தினபுரி - கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியும், தங்கப் பொருட்கள் திணைக்களத்திற்கு பொறுப்பான அதிகாரியுமே நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கலவானை பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 33 வயதுக்குட்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
68,978,357 ரூபா பெறுமதியான மோதிரங்கள், வளையல்கள், காதணிகள், பதக்கங்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் காணாமல்போயுள்ளதாக நிதி நிறுவனத்தின் முகாமையாளர் களவாணை காவல் நிலையத்தில் முறைபபாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்