பாரிய அளவில் நகை கொள்ளை - கையும் களவுமாக சிக்கிய இருவர்
வீடொன்றை உடைத்து சுமார் 268 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெலிக்கடை, கலபலுவாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் மண்டாவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை

காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்களிடம் இருந்து 924 இரத்தினக்கற்கள், 08 கைக்கடிகாரங்கள், 05 தங்க மாலைகள், 04 வளையல்கள், 06 தங்க மோதிரங்கள், 07 வளையல்கள், 10 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலங்கம வடக்கு மற்றும் மாலபே பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.