கொல்லாமல் கொல்ல பார்க்கின்றார்கள் -மைத்திரி கவலை
தன்னைக் கொல்லாமல் கொல்லப் பார்ப்பதாக தெரிவிக்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபாலசிறிசேன, தான் ஒருபோதும் அஞ்சி பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
நான் எதற்கும் பயப்படப்போவதில்லை. அதுபோல பின்வாங்கவும் போவதில்லை.
நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கை
நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்து பின்னர் அதிபரானார். பண்டாரநாயக்கவைக் கொலை செய்தார்கள். சிறிமாவோவின் பிரஜாவுரிமையை பறித்தார்கள். இப்போது என்னைக் கொல்லாமல் கொல்லப் பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
சர்வதேசத்துடன் எனக்கிருக்கும் தொடர்புகள் காரணமாகவே என்னையும் எனது கட்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.
தெளிவான எதிர்காலம்
நாட்டை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியால்
மட்டுமே கட்டியெழுப்ப முடியும். நாடு
முகங்கொடுக்கும் பிரச்சினைகள் என்ன
என்பது தொடர்பில் எனக்கு நன்கு
தெரியும். சுதந்திரக் கட்சிக்கு தெளிவான
எதிர்காலம் இருக்கிறது என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்