ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை

Tamils Jaffna Sri Lanka Politician Sri Lanka India
By Shadhu Shanker Sep 15, 2023 12:33 PM GMT
Report

ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாகதீபம் திலீபன் அவர்களது 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்கிராச மன்னன் சுற்றுவட்டத்தில், கரைச்சிப்  பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன்  தலைமையில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது, இன்று (15) காலை 9 மணியளவில் நடைபெற்றிருந்தது. இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை | Thileepan Memorial Day

அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் திலீபன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளும் இன்றுவரையும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

இந்திய வகிபாகத்தில்

தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட சாதாரண கோரிக்கைகள் கூட 36 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாத நிலையே இந்தநாட்டில் இன்னமும் தொடர்கிறது.

ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால இனப்பிரச்சினை தொடர்பில் அன்னை இந்திராகாந்தி அவர்கள் கொண்டிருந்த கரிசனை பின்வந்த நாட்களில் கூருணர்வு அற்ற சில ராஜதந்திரிகளின் செயல்களால் இந்திய வகிபாகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

அதன் விளைவாகவே முள்ளிவாய்க்கால் வரையிலான மிகமோசமான இனப்படுகொலை வரையும் ரத்தமும் சதையுமாக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் நடைபெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை | Thileepan Memorial Day

அன்றே சரியான திசையில் சிந்தித்து இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழதேசம் அவசியமென்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்திருந்தால் இன்று சீன தேசத்தால் ஏற்படுகின்ற நெருக்கடிகளின் விளைவுகள் அதே சிந்தனைப் போக்கை கிளர்த்தியிருக்கும் தேவைப்பாடு எழுந்திருக்காது.

ஈழத்தமிழர் தேசமே

எப்பொழுதும் இந்தியாவே எங்களை பாதுகாக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் கேந்திர நலனைப் பாதுகாக்க வேண்டியது ஈழத்தமிழர் தேசமே என்பதும் ஏற்கனவே உணரப்பட்ட உண்மை.

ஈழத் தமிழர் விடயத்தில் முதல்நிலை நடுநிலையாளராக இந்தியா செயற்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை | Thileepan Memorial Day

எனவே ஒருவருக்கொருவர் இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் இன்று இந்தியாவும் ஈழதேசமும் இருக்கிறது.

அத்தகைய காலச்சூழல்களைக் கருதி, இந்தியா ஈழத் தமிழர் விடயத்தில் 36 ஆண்டுகளுக்கு முன்விட்ட தவறுகளைப் புரிந்து கொண்டு ஈழ தேசத்தைப் பாதுகாக்கவும் அதனூடாக தென்கோடியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு நட்புமிக்க சக்தியாக ஈழத் தமிழரது தாயகத்தை உருவாக்கவும் தயாராக வேண்டும்.

அதற்கான முதல் நிலை நடுநிலையாளராக இந்தியா தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024