நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவுக்காட்சியகம் திறந்து வைப்பு
Sri Lankan Tamils
Jaffna
By Jaso
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் இன்று மாலை (21) திறந்து வைக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இன்று மாலை 6.30 மணியளவில் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமானதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோர்களால் திறந்து வைக்கப்பட்டது.
திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் இதன்போது தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் மாவீரர்களின் பெற்றோர்கள்,முன்னாள் போராளிகள் சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













4ம் ஆண்டு நினைவஞ்சலி