பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி
memorial
thileepan
m k sivajilingam
By Vanan
திலீபனின் உயிர் பிரிந்த நேரத்தில் யாழில் அஞ்சலி தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
யாழ். வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை, தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


