சுமந்திரன் : சாணக்கியனுக்கும் அடி விழும்! தமிழர் தரப்புக்கு பகிரங்க எச்சரிக்கை
தியாக தீபம் திலீபனது நினைவூர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமையானது தமிழர்களைப் பொறுத்தவரை இரத்தம் கொதிக்கும் விடயம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் இதிலிருந்து சிங்கள தேசியவாதம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட வேண்டிய எச்சரிக்கையாகவே, இதனைப் பார்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட இதுபோன்ற கொலைவெறித் தாக்குதலினை தடுக்காவிட்டால் கஜேந்திரனுக்கு நடந்தது நாளை சுமந்திரனுக்கும், சாணக்கியனிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடம்பெறலாம்.
இப்பேரணியின் போது மக்கள் கூட்டம் காணப்படாமையே இந்தத் தாக்குதல் சர்வதேச ரீதியில் கவனம் ஈர்க்கப்படவில்லை.
இவ்வாறான போராட்டங்களுக்கு முதலில் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல் எதிர்காலத்திலும் நடக்கலாம். ஆகவே இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழர் தரப்பு முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.