புலிப் பயங்கரவாதியான கஜேந்திரனை உடன் சிறையில் அடையுங்கள்: இனவாதத்தை கக்கிய சிங்கள இனவாதி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஒரு புலிப் பயங்கரவாதி என்றும் அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான திலீபனை நினைவேந்தும் ஊர்தியைத் திருகோணமலையில் சிங்கள மக்கள் தாக்கிச் சேதப்படுத்தியமை நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் நிராகரித்த கஜேந்திரன்
அந்த ஊர்தியில் கஜேந்திரனும் பயணித்தபடியால் தான் அவரும் தாக்குதலுக்கு இலக்கானார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கஜேந்திரனும் ஒரு புலிப் பயங்கரவாதி எனச் சிங்கள மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் வடக்குத் தமிழ் மக்கள் நிராகரித்த கஜேந்திரன், தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வந்தார் என்றும் விமல் வீரவன்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.