"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" வெளியாகிய கண்டண அறிக்கை

Sri Lankan Tamils Jaffna
By Kiruththikan Sep 17, 2022 07:53 AM GMT
Report

தியாக தீபம்

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

தியாகி திலீபன் நினைவு தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆரம்ப நிகழ்வன்று நல்லூர் முன்றலில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தின் முன் குழப்பநிலையை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமன்று 15.09.2022 நடைபெற்ற ஒழுங்கு படுத்தல் நிகழ்வுகளின் போது கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலை இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அறிக்கை

"தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய, அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன்.பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருகி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர்.

காந்திய தேசதிற்கே அகிம்சையை போதித்த தலைமகன். இவ்வாறாக தியாகத்தின் சிகரமான திலீபன் அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் ஆரம்ப தினமான 15.09.2022 அன்றும் அதற்கு முன்பாக நடைபெற்ற ஒழுங்கு படுத்தல் நிகழ்வுகளின் போதும் இடம்பெற்ற கட்சி அரசியல் ரீதியான முறுகல் நிலையை அறிந்து தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.

தியாகி திலீபன் அறப்போரினை நடத்தி ஆகுதியான நல்லூர் மண்ணிலேயே இச்சம்பவங்கள் நடைபெற்றது மிக வேதனை அளிப்பதாக உள்ளது. அளவிட முடியாத தியாகத்தினை எவருமே தமது வாக்கு அரசியலுக்கு பயன்படுத்துவத்தினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" வெளியாகிய கண்டண அறிக்கை | Thileepan Remembrance Tamil People

அத்துடன் நினைவு நிகழ்வின் போது ஒரு மாவீரரின் தந்தையும், தியாகி திலீபன் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் கூட இருந்தவரும், நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை கொண்ட மூத்த போராளி ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். ஒரு மாவீரரின் வணக்க நிகழ்வில் இன்னொரு மூத்த போராளியை அவமதிப்பதினை ஏற்றுகொள்ள முடியாது.

பார்த்தீபன் இன்னமும் பசியுடனேயே இருக்கின்றான். 35 வருடங்கள் கடந்தும் தியாகி திலீபன் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், எமது உரிமைகளை இழந்து, எமது நிலங்கள் எங்களில் எதிரியினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளோம்.

தமிழினமே ஓரணியாக அணிதிரண்டு போராடவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே அனைவரும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து, அனைவரும் நினைவெழிச்சி நிகழ்வுகளின் புனிதத்தை களங்கப்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம். நினைவெழிச்சி நிகழ்வுகள் எந்தவொரு அரசியல் கட்சியினதும் தனியுரிமை சொத்தல்ல. இன் நிகழ்வுகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களின் முன்னெடுப்பில் நடைபெறுவதாகவே அமைய வேண்டும்.

"மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்" வெளியாகிய கண்டண அறிக்கை | Thileepan Remembrance Tamil People

நாளை (17/09/2022) அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கான பொது கட்டமைப்பு தொடர்பான கூட்டம் தொடர்பான யாழ். மாநகர முதல்வரின் அழைப்பு எமக்கும் கிடைக்கப் பெற்றது. ஆயின் நாம் மேலே குறிப்பிட்டது போல் நினைவெழிச்சி நிகழ்வுகள், அதற்கான பொது கட்டமைப்பு என்பன கட்சி அரசியலை கடந்து பொது சமூகமாகிய மாவீரர்களின் பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் அடங்கியவர்களின் முன்னெடுப்பிலேயே கட்டமைக்கப்படவேண்டும்.

இவ்வாறான முன்னெடுப்பினை மேற்கொள்ளும் பொது சமூக தரப்பிற்கே எமது பரிபூரணமான ஆதரவு இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இதற்கு மேலும் இவ்விடயத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்து கொள்ளும் களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என அனைத்துத்தரப்பினரிடமும் உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம்.

தியாகி திலீபன் அவர்களில் இலட்சிய வாக்குக்கு அமைய "மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்" எனும் தாகத்துடன் தொடந்து பயணிப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026