திருமலையில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
Sri Lankan Tamils
Trincomalee
Eastern Province
By Independent Writer
Courtesy: Buharys Mohamed
தமிழ் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது நாள் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் - உப்பூறல் கிராமத்தில் இன்று (20) காலை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் விளக்கேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலி செலுத்தினர்
இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |