பருத்தித்துறைக்கு வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி : பட்டாசு கொளுத்திய இளைஞன் காவல்துறையால் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம்திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் "திலீபன் வழியில் வருகிறோம்" என்ற ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பவனி, இன்று பிற்பகல் 01:30 மணியளவில் பருத்தித்துறை நகர் பகுதியை வந்தடைந்துள்ளது.
பலரும் திரு உருவ படத்திற்கு அஞ்சலி
இதன் போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர்வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்
பட்டாசு கொளுத்திய இளைஞன் காவல்துறையால் கைது
இதன் போது பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொளுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலை காணப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை பருத்தித்துறை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



