புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) குறித்த ஊர்திப்பவனி ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் அஞ்சலி
இவ் ஊர்திப் பவனியானது புங்குடுதீவு பகுதியின் மக்களின் அஞ்சலிக்காக முக்கியமான இடங்களில் தரித்து நின்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த ஊர்திப் பவனிக்கு யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள், வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள், புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
