மகிந்தவின் பாதுகாப்பு நீக்கம் : இருமுறை யோசிக்க கோருகிறது மொட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) பாதுகாப்பை குறைப்பதற்கு முன்னர் அரசாங்கம் ஒரு முறையல்ல இருமுறை சிந்திக்க வேண்டும் எனவும், அத்தகைய தலைவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பகா மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த(Indika Anuruddha) தெரிவித்துள்ளார்.
பியகம தொகுதியின் பிரதான தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் மாகொல பிரதேசத்தில் நேற்று (20) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபின் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேலும் கூறியதாவது
யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்
“இந்த நாட்டில் முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த கொடூர யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவரின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாவலர்களையும் பாதுகாப்பு வாகனங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று பிராந்திய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்ட போதிலும், அந்த அமைப்பு இன்னும் உலகில் இருந்து அகற்றப்படவில்லை.
அச்சுறுத்தல்கள் இன்னும் நீங்கவில்லை
எனவே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வந்த அச்சுறுத்தல்கள் இன்னும் நீங்கவில்லை. இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.அவரின் பாதுகாப்பைக் குறைக்கும் முன் இருமுறை யோசிக்க வேண்டும்.
தேசிய மக்கள் படை பல ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசி வருகிறது. அன்று விமர்சித்தவர்கள் தற்போது நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆனால், அதிகாரத்தை பெறுவதற்காக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
தன்னிடம் கோப்பு இருப்பதாக கூறும் அநுர
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன நான்காக வீழ்ந்ததாக சிலர் கூறுகின்றனர். தேர்தல் தளத்தில் எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள். அவற்றுக்கான பதில்களை எதிர்காலத்தில் வழங்குவோம்.
தன்னிடம் கோப்பு இருப்பதாக அநுர கூறுகிறார். அநுர இப்போது எங்களிடம் தகவல் கேட்கிறார். இவை வெறும் நகைச்சுவைகள். இந்தத் தேர்தலில் பொது மக்கள், பெரமுன மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |