மாவிட்டபுரத்தில் அமையவுள்ள திருக்குறள் வளாகம்
mavittapuram
thirukkural complex
Thirumurugan
By Sumithiran
மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தின் அடிக்கல் நாட்டு வைபவம் நாளை (25.10.2021) காலை 10.00மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் (Thirumurugan)தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ,அவுஸ்ரேலியாவில் வாழ்பவருமான ,வைத்திய நிபுணர் கமலாகரன் அவர்களின் பேருதவியில் இப்பாரிய திருப்பணி நடைபெறவுள்ளது.
திருக்குறள் முழுவதும் காட்சிப்படுத்தப்படுவதுடன், திருக்குறள் ஆய்வு நூலகம்,மற்றும்,திருக்குறள் ஆய்வு அரங்கம்,தியான நிலையம் எனப்பல விடயங்கள் மக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
மாவை ஆதீனகர்த்தா அவர்களின் ஆசியுடன் அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும்.