ரணிலை நாடாளுமன்றம் அனுப்பியதன் நோக்கம் இதுதான்! கட்சியின் துணைத்தலைவர் வெளியிட்ட தகவல்
UNP
Parliament
SriLanka
Ranil Wikfrramasingka
Ruwan Wijewarthana
By Chanakyan
சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் ஒரு தேசிய கொள்கையை கொண்டு வர முயற்சிக்க அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம். இது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முழு நாட்டிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நாள்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதைவிட இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதே தமது கட்சியின் கவனம் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி