நல்லூரில் நடந்த தியாக யாகம் : பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்
1987 ஆண்டு செப்டெம்பர் 15 அன்று காலையில் பிரதி தலைவர் மாத்தையா மூலமாக நல்லூர் முன்றலுக்கு அழைத்து வரப்பட்ட தியாக தீபம் திலீபன் வயதான ஒரு அம்மா நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்க உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றார்.
அன்றைய காலகட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகால சட்டத்தை நீக்குதல், ஊர்காவல் படையினரின் ஆயுதக் களைவு மற்றும் காவல் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் ஆகிய ஐந்தம்ச கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.
இந்த உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் “எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன். அதுவே எனது இறுதி ஆசை“ என்று தியாக தீபம் ஆற்றிய உரை அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அத்துடன் “பார்த்தீபன் இன்னும் பசியோடு இருக்கிறான்“ என்ற வாசகம் 1987ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஈழத்தமிழினம் சார்ந்த பசியோடு தான் தியாக தீபம் திலீபன் இருக்கின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |