தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு ( படங்கள்)

Jaffna Tharmalingam Sitharthan Pon Sivakumaran
By Vanan Jun 05, 2022 09:02 AM GMT
Report

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாகி பொன். சிவகுமாரனது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை ஏற்றி அகவணக்கம், மலரஞ்சலி என்பனவும் இடம்பெற்றது.

தொடர்ந்து பொன். சிவகுமாரனின் கல்லறை உள்ள இடத்திலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு ( படங்கள்) | Thiyagi Pon Sivakumaran 48Th Memorial Jaffna

தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு ( படங்கள்) | Thiyagi Pon Sivakumaran 48Th Memorial Jaffna

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் அணிவித்தார்.

தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தியாகி பொன். சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு ( படங்கள்) | Thiyagi Pon Sivakumaran 48Th Memorial Jaffna

மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் வகிபாகம் பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம்

வருடா வருடம் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023