வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.
பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில், சந்நிதியான் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர்.

அடியவர்கள் வருகை
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.

திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர் உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ் வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |