ஹமாஸ் அமைப்பினரிடம் பிணை கைதிகளாக சிக்கியவர்கள் தொடர்பில் இஸ்ரேல் வெளியிட்ட புதிய தகவல்!
ஹமாஸ் அமைபினால் காசா முனைக்கு பிணை கைதிகளாக கடத்தி செல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் இஸ்ரேலில் 1,403 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலரை பிணை கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர்.
மீட்கும் நடவடிக்கை
ஹமாஸ் ஆயுதக்குழு வெளிநாட்டினர் உள்பட 200 பேரை பிணை கைதிகளாக காசாவுக்கு கடத்தி சென்றுள்ளது. ஹமாஸ் தாக்குதலின் போது மாயமான இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹமாசால் காசா முனைக்கு பிணை கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட 200 பேரில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிணை கைதிகளாக கடத்தி செல்லப்பட்டவர்களில் 10 பேர் குழந்தைகள், 20 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.