இலங்கைக்கு சவாலாகியுள்ள நீரிழிவு அச்சுறுத்தல்
இலங்கையில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கண் தொடர்பான சிக்கல்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர்கள் இதனை கூறியுள்ளனர்.
மேலும், இலங்கையில் நீரிழிவால் மாதத்திற்கு ஒருவர் காலகளை இழப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சுகாதார துறைக்கு பெரும் சவால் ஆகியுள்ள நிலையில் நீரிழிவின் தாக்கம் குறித்து, யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு துறை நிபுணர் அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |