கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள்!
கட்டுநாயக்கவில் மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு இந்தியப் பிரஜைகள் மற்றும் ஏனைய ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஆகியோருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் விமானப் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப் பணியாளர்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிட்னியிலிருந்து புறப்பட்ட விமான பயணத்தின் போது இவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு பரிமாறுவது தொடர்பாக ஏற்பட்ட இத்தகராறின் போது ஆத்திரமடைந்த அவர்கள் உணவுத் தள்ளுவண்டியைப் (Food trolley) பலமாகத் தள்ளியுள்ளனர்.
இருப்பினும், விமானத்தின் நுழைவாயிலுக்கோ அல்லது பிற பகுதிக்கோ எவ்விதப் பெரிய சேதமும் ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் தங்களது முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், அங்கிருந்து இணைப்பு விமானம் மூலமாகப் புதுடெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் விமான நிலைய காவல்துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்ட இம்மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை (05-11-2026) நடைபெறவுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான சில தகவல்களை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், இலங்கை விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனமும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |