கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகள் கடத்தல்
Sri Lanka Police
Sri Lanka
Colombo Hospital
By Sumithiran
கொழும்பு பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் மூன்று மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை விடுமுறை தினத்தன்று மாணவிகளை கடத்திய மூன்று இளைஞர்கள் அவர்களை குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்த காவல்துறை
குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டார்.
மாணவிகள் மருத்துவமனையில்
இதேவேளை மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச தெரிவித்தார்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி