சூடு பிடிக்கும் இந்திய கனேடிய உறவு : ஹர்தீப் சிங் கொலை தொடர்பில் மூன்று இந்தியர்கள் கைது!
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார்[Hardeep(Singh Nijar) (வயது 45), கனடாவில் கடந்த 2023 ஜுன் மாதம் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அந்நக் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து மூன்று இந்தியர்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
அவர்கள் மூன்று பேரும் அல்பெர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் (non-permanent residents) என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.
மூன்று பேர் அந்தக் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பேசிய கனடா காவல்துறை துணை ஆணையர் டேவிட் திபோல் (David Teboul), விசாரணை தொடர்வதாக தெரிவித்தார்.
கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா
அந்த மூன்று பேர் தொடர்பாக மட்டுமன்றி கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
“இந்த விசாரணை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்தக் கொலையுடன் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்துக் கைது செய்வதில் நாங்கள் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் அரச கனடிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் டேவிட் டெபவுல்.
பிரிட்டிஷ் கொலம்பியாவை
அல்பெர்ட்டாவில் உள்ள எட்மோண்டன் நகரில் மூன்று இந்திய நாட்டவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏப்ரல் 6ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைவர்.
இந்தக் கொலைக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே உறவு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிரு்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |