சாய்ந்தமருதில் நீரில் கவிழ்ந்த கார்! மூவர் உயிரிழப்பு - போராடி மீட்ட மீட்பு பணியாளர்கள்
கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காரிலிருந்து மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில் மூவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று நீரில் பாய்ந்துள்ளது.

நீரில் பாய்ந்த காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கார் நீரில் முற்றாக மூழ்கியிருந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்களின் போராட்ட மீட்புக்கு பின்னரே கார் கரையேற்றப்பட்டு காருக்குள் இருந்த மூவரையும் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா அமைப்புக்கள், கல்முனை சுழியோடிகள், மீட்பு படையினர், காவல்துறையினர், கடற்கடையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள், பொதுநல அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி - நூருல் உமர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 மணி நேரம் முன்
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம்
21 மணி நேரம் முன்