தயார் நிலையில் சிறி லங்கா விமானப்படை
Climate Change
Sri Lanka Air Force
Weather
By Jaso
கொட்டித் தீர்க்கும் மழையை அடுத்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை கருத்தில் கொண்டு மூன்று விமானங்கள் மூன்று இடங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க(Dushan Wijesinghe) தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று விமானங்களும் கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிங்குராங்கொட விமானப்படை தளங்களில் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மூன்று இடங்களில்
இந்த மூன்று விமானங்களும் அவசரகாலச் செய்திகளைப் பெற்றவுடன் உடனடி மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படை தெரிவித்தது.

பல பகுதிகள் நீரில் மூழ்கி
வெள்ள நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்