மொட்டுவின் உறுப்பினர்களுக்கு மகிந்த இட்ட கட்டளை
கொழும்பில் இருந்து நாள் முழுவதும் வேட்பாளர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுமாறு சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச(Mahinda Raja Paksha)மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) ஆகியோர் அந்த முன்னணியின் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 'பொய் வேட்பாளர்களை மட்டும் தேடி ஓடி வேலை செய்யாதீர்கள்' என்றும் இருவரும் கூறியுள்ளனர்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர்
கடந்த வாரம் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவைச் சந்தித்த போதே இருவரும் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga)வுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்துள்ளனர். இருவரையும் சந்தித்த எம்.பி.க்கள் குழு எதிர்வரும் அதிபர் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
அனைவரும் இணைந்து எடுக்க வேண்டிய தீர்மானம்
அங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து எடுக்க வேண்டிய தீர்மானம் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான தீர்மானம் எடுக்கப்படும் என இருவரும் மேலும் குறிப்பிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |